சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ1200 சரிவடைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ. 150 சரிந்து ரூ. 4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் வியாழக்கிழமை மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்தது.மீண்டும் பிற்பகல் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது.அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையானதங்கம் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ1200 சரிவடைந்துள்ளது.ஒரு பவுன் ரூ. 38,408-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 2.70 குறைந்து ரூ. 70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






