தில்லி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருண் ஜேட்லி பெயர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
arun j - 2026

தில்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியமான ஃபெரோ ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லி பெயர் சூட்டப்படும் என தில்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆக.24 சனிக்கிழமை அன்று உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு காலமானார்!

அருண் ஜேட்லி, அரசியல் மட்டுமல்லாது விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்திய கிரிக்கெட் போர்ட் துணைத் தலைவராகவும் தில்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்தவர். எனவே, அவரது நினைவைப் போற்றும் வகையில், இந்தியாவின் இரண்டாவது பழைமையான கிரிக்கெட் மைதானமான தில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லி பெயர் சூட்டப்படும் என தில்லி கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

அதே நேரம், ஆடுகளத்திற்கு பெரோஷா கோட்லா பெயர் தொடரும் எனத் தெரிவித்துள்ளார் தில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.