என்ன..? உதயநிதி பிறந்தே 18 வருடங்கள்தானே ஆவுது..?!

Reporters Diary அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
udhaya - 2026

திமுக., இளைஞர் அணியில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடமில்லை என்று தற்போதைய இளைஞரணித் தலைவர் உதயநிதி அதிரடி முடிவு எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இது குறித்து நாளிதழில் வந்த செய்தியை இன்று பலரும் பகிர்ந்து கொண்டு, 41 வயது இளைஞரணித் தலைவர், 35 வயதுக்கு மேற்பட்டால் இளைஞர் அணியில் இடமில்லை என்று உத்தரவு போட்டிருக்கிறார் என்று கலாய்த்து டிவிட்டரில் பதிவுகளை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அடேய் என்னாங்கடா தீர்மானம் இது என்று ஆச்சரியப் பட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உதயநிதிக்கு 41 வயதா ? அவர் பிறந்து 18 வருடங்கள் தான் ஆகிறது என்று புதிய காமெடியுடன் வருவார்கள்..எதைச் சொன்னாலும் நம்புகிற கூட்டம் இருக்கின்ற வரையில் இவர்கள் தமிழர்கள் தலையில் மசாலா அரைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்..???? என்று ஒரு கருத்தும் உலா வந்தது.

விதிமுறைகள் தொண்டர்களுக்குத்தான், தலைவர்களுக்கு இல்லை போலும்! என்று கருத்துப் பதிவு செய்திருந்தார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்..ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.