பியூஷ் மானுஷை கைது செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
piyush manush - 2026

பாஜக., அலுவலகத்துக்கு வந்து தாக்குதல் தொடுத்த பியூஷ் மானுஷ் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

புதன் கிழமை நேற்று மாலை 5 மணி அளவில், சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் என்ற பெயரில் இயங்கும் பியூஷ் மானுஷ் என்பவர், பாஜக., அலுவலகத்துக்குச் சென்று, பிரச்னையில் ஈடுபட்டார். தொடர்ந்து பாஜக. தொண்டர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதனால் அவர் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்நிலையில், பியுஷ் மானுஷ் செயல் குறித்த பின்னணியை பலரும் அலசி வருகின்றனர். முதல் நாள் சேலத்தில் ஸ்டாலின் சென்றதும், அதற்கு முந்தைய நாள் திமுக., குறித்து வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் என்பவர் மீது திமுக., புகார் அளிக்க அதைத் தொடர்ந்து டிவிட்டர் பதிவுகளில் திமுக.,வை பலரும் விமர்சனம் செய்ததும், தொடர்ந்து இந்த விவகாரத்தை திசை திருப்ப பியூஷ் மானுஷ் விவகாரத்தை திமுக., கிளப்பச் செய்ததும், பியூஷ் மானுஷ் தாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் டிவிட்டர் பதிவிட்டதும் என பின்னணியை அடுக்குகின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில், திமுக., அலுவலகத்திலும் இது போல் கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்கின்றனர். அத்துடன் பியூஷ் மானுஷ் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

2G ஊழல் இந்தியா முழுவதும் நாறியபோது, எவனாவது அறிவாலயம் போய் கேள்விக்கேட்டிட்டு உயிரோடு திரும்பியிருப்பான் என நினைக்கறீங்க..

ஜனநாயக அமைப்பில் ஒரு கட்சி அலுவலுகத்திற்க்கு தகறாரு செய்கின்ற நோக்கத்தோடு செல்வதே தவறு..

அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த சமூக ஊடகங்கள் உள்ளன..
பொதுக் கூட்டம் போட்டு பேசுதல், போராடுகிற உரிமை இருக்கையில் மாற்று கட்சி அலுவலகத்திற்கு செல்வது நகஸல் அதாவது பாராளுமன்ற நடைமுறைகளை பின்பற்றாத ஆயுதப் போராட்ட, வழிமுறையாகும்.. – என்று கருத்து பதிவு செய்கின்றனர்.

அதே நேரம், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், தனக்கு திமுக., வினர் செய்த அராஜக செயலையும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பியூஸை உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.