அது ஒரு பாடம்! கழிவறை சுத்தம்! கந்துவா ஆட்சியர்!

Published:

cleaning - 2026

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை மாப் வைத்து சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கழிப்பறையை இரண்டு மாணவர்கள் சுத்தம் செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து இன்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளன.

உள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஒருவர், ஒரு மாணவரின் குடும்ப உறுப்பினரும் ஆன அவர் திங்களன்று காண்ட்வாவுக்கு அருகிலுள்ள சிஹாடா கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வதைக் கண்டு வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
thanvi colec - 2026

மாணவர்களில் ஒருவர் இது பற்றி கூறியிருப்பதாவது, அவரிடம், பள்ளி முதல்வர் கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாகவும், தேர்வில் கூடுதல் ஐந்து மதிப்பெண்கள் தருவதாகவும் உறுதியளித்தாக கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்த கிராமத்திற்கு ஒரு அதிகாரி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜே.எஸ்.ரகுவன்ஷி தெரிவித்தார்.

எப்படி பார்த்தாலும் மாணவர்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்தால் தவறில்லை என்று மாவட்ட ஆட்சியர் தன்வி சவுண்ட்ரியால் கூறினார். “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு ஆசிரியர் கேட்டிருந்தால் அது தவறாக இருந்திருக்கும். எல்லா குழந்தைகளும் இதைச் செய்தால் தவறில்லை” என்று அவர் கூறினார். அவர்களுக்கு சுத்தம் தொடர்பாக பயிற்சி கல்வியே அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இதில் எந்தவித தவறுமில்லை’ எனத் தெரிவித்துள்ளார்

Related articles

Recent articles

spot_img