லண்டன் ஷாப்பிங்கில் ரஜினி! ட்விட் போட்டு மாட்டிய குஷ்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
kushboo - 2026

தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. “நடிகன்”, “சின்ன தம்பி”, “அண்ணாமலை”, “ரிக்ஷா மாமா”, “நாட்டாமை” போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை குஷ்பு. மேலும் ரஜினியுடன் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

rajini - 2026

இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது இவர் இரண்டு சீரியலில் நடித்து வருகிறார்.

kush rajini - 2026

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார். தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது “தான் லண்டனில் ஷாப்பிங் செய்தபோது ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய மொபைல் கவர்களை பார்த்துள்ளேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஆனால் அது உண்மையில் ரஜினி இல்லை, Emir of Qatar தமீம் பின் ஹமாத் என்பவரின் புகைப்படம்.

இதனால் இது குறித்து ட்விட்டரில் பலரும் குஷ்புவை விமர்சித்து வருகின்றனர். வேறு வழியில்லாமல் தன்னுடைய தவறை உணர்ந்து, தற்போது வேறொரு ட்விட்டில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.