samantha super - 2026

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இவற்றில் சீமராஜா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

`சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்,. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டது. இந்த படத்திற்கு சமந்தா சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

samantha super - 2026தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending