அமெரிக்க அதிபர் டிரம்பின் சம்பளமில்லா மூத்த ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டில், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னெரும் குறைந்தது 82 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களால் மேற்கொள் காட்டப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன. டிரம்பின் மகளும் மருமகனும் தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்க அதிபரின் உதவியாளர் என்ற நிலையில் ஊதியம் வழங்கப்படாத பணியாளராக இவான்கா டிரம்ப் தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
இவான்கா டிரம்ப்பின் கணவரான ஜாரெட்டு குஷ்னெர் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மூத்த ஆலோசகராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




