அமெரிக்க அதிபரை கலாய்த்த சிவா படக்குழுவினர்

சமீபத்தில் கனடா நாட்டில் ஜி7 மாநாடு நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை கேலி செய்து ‘தமிழ்ப்படம் 2’ படக்குழுவினர் ஒரு புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் நாயகன் சிவாவை சுற்று படக்குழுவினர் நிற்பது போல் உள்ள இந்த புகைப்பட்ம் நேற்று மாலையில் இருந்தே டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் ஓபிஎஸ் உள்பட பலர் கிண்டலடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபரையும் படக்குழுவினர் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.