பெண்ணிடமிருந்து சங்கிலி அபகரிப்பு! பின்னர் அந்த பெண் செய்த செயல்….!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
chain snatching - 2026

ஒரு பெண்மணியும்,அவரது மகளும் சங்கிலி பறிக்கும் ஒருவனை பிடித்த நிகழ்வு தில்லியில் பரபரப்பானது.

பெண்கள் தனியாக செல்லும் போதோ அல்லது ஆளில்லாத இடத்திலோ பெண்களின் கழுத்திலிருந்து சங்கிலி பறிப்பது வாடிக்கையான ஒன்று

பைக்கில் இருவர் செல்ல பின்னாடி அமர்ந்திருப்பவர் இறங்கி வந்து அறுத்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பி விடுவார். அல்லது பைக்கில் இருந்த படியே இழுத்து பெண்களை வண்டியோடு இழுத்து செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 30 ம் தேதி தில்லியின் நாங்லோய் என்ற இடத்தில் பைக் மூலம் ஒரு பெண்ணின் சங்கிலி அறுக்க முயன்ற போது அந்த பெண் மற்றும் அவரது மகள் அவனை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து கிழே தள்ளினர்.

பின் அங்கிருந்த மக்கள் சிலர் ஓடி வந்து அவனை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். இது போன்று பெண்கள் விழிப்புணர்வோடும், சம்யோஜிதமாகவும் நடந்து ஆபத்துகாலங்களில் தங்களையும் தங்கள் உடமைகளையும் காத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.