ஆரோக்கிய சமையல்; முள்ளங்கி ராய்தா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mulanki - 2026

முள்ளங்கி ராய்தா

தேவையானவை:

துருவிய முள்ளங்கி – ஒரு கப்,

கடைந்த தயிர் – ஒரு கப்,

பச்சை மிளகாய் – ஒன்று (சிறியது),

கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

கடுகு – கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

எண்ணெய் – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

mulanki raitha - 2026

செய்முறை:

துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு). பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் (காரல் நல்லது. அப்படியே கூட தயிருடன் சேர்த்து, உப்பு போடலாம்).

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.