எக்குறையும் நீக்கி விடும் சுக்கு பொடி குழம்பு!

Published:

chukku - 2026

சுக்குப்பொடி குழம்பு

தேவையானவை:

சுக்குப்பொடி – கால் கப்,

பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

புளி – 50 கிராம்,

தேங்காய்ப்பால் – கால் கப்,

கடுகு – கால் டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

chukku kuzhambu - 2026

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.

வாயு தொந்தரவு, வயறு மொடமொடப்பு போன்றவை நீங்கி, ஜீரணசக்தி உண்டாகும். பசி எடுக்கும். காய்ச்சலினால் ஏற்பட்ட வாய் கசப்பினை நீக்கி நாக்கிற்கு சுவையைக் கொடுக்கும்.

Related articles

Recent articles

spot_img