
வேர்க்கடலை காரக் குழம்பு
தேவையானவை:
வேர்க்கடலை – கால் கப்,
தோலுரித்த சின்ன வெங்காயம் – கால் கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
புளி – 50 கிராம்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
திக்கான தேங்காய்ப்பால் – கால் கப்,
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
வெந்தயம் – அரை டீஸ்பூன்.
செய்முறை:

வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில், வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து.. சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும், வேக வைத்த வேர்க்கடலை, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரசைல் சேர்த்து நன்கு கலக்கவும்.
நன்றாகக் கொதித்ததும், அரைத்த கலவையைப் போட்டுக் கலந்து, பொடித்த வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.



