
புரூக்கோலி சப்பாத்தி
தேவையானவை:
புரூக்கோலி – ஒரு கப்,
கோதுமை மாவு – 2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

புரூக்கோலியை கழுவி பொடியாக நறுக்கவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு இதை லேசாக வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு, தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, தாவாவில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: குழந்தை பெற்ற பெண்கள், ஒரு மாதத்துக்கு புரூக்கோலியை சாப்பிடக்கூடாது.



