புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தியில் மழை வேண்டி குதிரை எடுப்பு திருவிழா!

உள்ளூர் செய்திகள் திருச்சி
100919 dn kuthirai - 2026

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தி கிராமத்தில் மழைவேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பஞ்சாத்தி கிராமத்தில் உள்ள மென்னமுடைய அய்யனார்கோயிலில் ஆண்டுதோறும் பருவ மழை தங்கு தடையின்றி பொழிய புரவி எடுப்பு எனப்படும் குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி அறந்தாங்கியில் செய்யப்பட்ட அய்யனார் மற்றும பரிவார தேவதைகள் மற்றும் அதன் வாகனங்களின் சிற்பங்களை தோளில் சுமந்து சென்று பஞ்சாத்தி கோயிலில் வைத்து கிராமத்தினர் மழைவேண்டி வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.