
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன் படத்திறப்பு விழா,குருவணக்கம்,முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள் என நடந்த முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீ் ராமகிருஷ்ண தபோவன தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தலைமை வகித்து முன்னாள் மாணவ மாணவிகளுக்கு ஆசியுரை வழங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த திருப்புனவாசல் பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ரானந்த தேவிபட்டிணம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி ஸ்ரீமத் ருத்ரானந்த,பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீ மத் பக்தானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன் அவர்களின் பட வீதி உலா விருத்தபுரீஸ்வரர் கோயிலில் தொடங்கி நான்கு ரத வீதிகளை வலம் வந்து பள்ளியை அடைந்தது அதனை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அவரது குடும்பத்தார்கள் முன்னிலையில் சுவாமி சுத்தானந்த திறந்து வைத்தார்
அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை கவுரவித்தல்,முதல் தலைமையாசிரியர் இளங்கோவன் குடும்பத்தார்களை கவுரவித்தல் ஆகியன நடந்தது.விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ஆசிரியர் சுப்ரமணியன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கியும் குருப் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.விழாவை முன்னிட்டு திருமணம் கோயில் விழா போல அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.