விமானத்தில் வேலை என மோசடி! 74 லட்சத்துடன் மாயமான ஜோடி!

கிரைம் நியூஸ் புகார் பெட்டி
british 1 - 2026

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மார்வின் டிசோசா மற்றும் யெல்லாப்பூரில் வசிக்கும் அவரது காதலி அங்கிதா ராய்கர் இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் சமூகவலைத்தளங்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதனை நம்பி 50 கும் மேற்பட்டோர் சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அந்த ஜோடியிடம் பயிற்சி கட்டணமாக செலுத்தியுள்ளனர். தாங்கள் இருவரும் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் ஆள் சேர்ப்பு முகவர்கள் என்று அறிமுகமாகியுள்னனர்.

lovers 3 - 2026

இதனை அடுத்து பயிற்சியில் சேர்ந்த 54 பேரை பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு வர வைத்து இரவு நேர பயிற்சியும் கொடுத்து. சில நாட்களில் உங்கள் பயிற்சி முடிந்துவிட்டதாகவும், நீங்கள் வேலைக்கு செல்லலாம் எனவும் கூறி அதற்கான லெட்டர், சீருடை இவற்றை கொடுத்துள்ளனர்.

கடிதத்தை பெற்ற 54 பேரும் அடுத்த நாள் குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்ல அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து சுமார் 74 லட்சத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.