ஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
saamai - 2026

சாமை அரிசி உப்புமா

தேவையானவை:

சாமை அரிசி – ஒரு கப்,

வெள்ளை வெங்காயம், கேரட் – தலா ஒன்று,

நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா அரை கப்,

பச்சை மிளகாய் – ஒன்று,

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி – சிறிதளவு,

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

saamai arisi uppuma - 2026

சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும். கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.