
கத்திரி வற்றல் குழம்பு
தேவையானவை:
கத்திரி வற்றல் – கால் கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
புளி – 50 கிராம்,
கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

தண்ணீரில் கத்திரி வற்றலை அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில், துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு போட்டுக் கலந்து கொள்ளவும்.
கொதித்தவுடன், கத்தரி வற்றல், சேர்த்து வேக விடவும். வாசனை வந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.



