போக்குவரத்து அபராதம் குறைக்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
m r vijaya bhaskar - 2026

இந்தியாவில், புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் விதிமுறை மீறிச் செல்பவர்களுக்கு மத்திய அரசு பலமடங்கு அபராதம் விதித்துள்ளது.

புதிய போக்குவரத்து சட்டத்தில் 10 மடங்கு வரை அபராதத் தொகை உயர்த்தப்பட்டிருந்தது.நாட்டில் பல மாநிலங்களில் வாகனத்தைவிட அபராதத் தொகை அதிகம் என்பதால், வாகனத்தை விற்று, வானக ஓட்டிகள் அபராதம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் வந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது :தமிழகத்தில் மோட்டார் வாகன விதிமீறல்களுக்கான அபராதம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.