கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடி! திருப்பியே தரலயே! புகாரளித்த பிரபல தயாரிப்பாளர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
gnanavelraja kamal - 2026

உத்தம வில்லன் பிரச்னையின் போது, என்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை நடிகர் கமல்ஹாசன் எனக்கு இப்போது வரை திருப்பியே தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.

‘உத்தம வில்லன்’ பட வெளீட்டின் போது, சிக்கலில் தவித்த கமல்ஹாசன், என்னிடம் ரூ. 10 கோடி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் கமல்ஹாசன் அந்தப் பணத்தை திருப்பித் தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் உத்தம வில்லன். இது கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியானது. கமலின் இந்தப் படமும் வியாபார ரீதியில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

gnnavelraja - 2026

நிதி நெருக்கடியால் தவித்த நிலையில், உத்தம வில்லன் படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில், கமல்ஹாசன் என்னை அணுகி பணம் கேட்டார். அப்போது, தமது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்ற உறுதியை அவர் கூறியதால், முன்பணமாக ரூ.10 கோடி பெற்றுக் கொண்டார் என்று புகாரில் கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.

அவ்வாறு தம்ம்மிடம் இருந்து ரு. 10கோடி பெற்று 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவர் தமது படத்திலும் நடிக்கவில்லை, வாங்கிய தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.