
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, பிரியாவாரியர் குறித்து மாணவர்கள் இரட்டை அர்த்த வசனத்தில் மோசமாக விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்களின் நடன நிகழ்ச்சி, நாடகம் போன்றவை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடிகைகளை கலாய்க்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நடிகை த்ரிஷாவின் வயது குறித்தும், அடுத்ததாக நயன்தாராவின் காதல் குறித்தும் மோசமாக விமர்சனம் முன் வைக்கப்பட்டது. ப்ரியா வாரியர் குறித்து
மிகவும் மோசமான முறையில் கமண்ட் செய்தனர்.

மாணவர்களின் இந்த செயலை சற்றும் எதிர் பாராத அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும், மாணவர்களின் இந்த செயல் குறித்து அறிந்த தமிழ் திரை உலகினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.