லீ- இறுதி ஊர்வலம் துவக்கம்: தேசிய துக்க தினம் அனுசரிப்பு

உலகம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முதல் பிரதமரும், நிறுவனருமான லீ க்வான் யூவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்தியாவில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இன்று மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா தேசிய துக்க தினத்தை அனுசரிக்கிறது. இதை ஒட்டி இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. இன்று அரசு முறை விழாக்கள் எதுவும் இல்லை. லீ-க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லீயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.