கன்னடத்தில் வேகத்தோடு வென்ற விவேகம்!

சினி நியூஸ் சினிமா
vevagam 1 - 2026

அஜித் நடித்த விவேகம் படம் கன்னடாவில் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம்தான் விவேகம். இந்த படம் தமிழில் பெரிய ஹிட் அடித்தது.

முக்கியமாக அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய பாராட்டை பெற்றது. படத்தில் அஜித்தின் லுக் பெரிய வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாக படம் போட்ட காசை விட பல கோடிகளை வசூல் செய்தது. தயாரிப்பாளர் தரப்பிற்கும் படம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் விவேகம் படம் கன்னடத்தில் கமாண்டோ என்று மொழி பெயர்க்கப்பட்டது. கமாண்டோ கன்னடாவில் நேரடியாக யூ டியூபில் வெளியானது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி இந்த படம் அங்கு வெளியானது. இந்த படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது கமாண்டோ படம் 1 மாதத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு தற்போது 12 லட்சத்தை கடந்து படம் சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்களை இது பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.