இது தான் தீபாவளிக்கு ஸ்பெஷல்: உக்காரை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ukkarai - 2026

உக்காரை;
தேவையானப் பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
ஏலக்காய் – 4,
நெய், வெண்ணெய் தலா – 1 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 5,
உலர்ந்த திராட்சை – 5.

செய்முறை:
கடாயை மிதமான தீயில் வைத்து கடலைப்பருப்பை நன்றாக வறுக்கவும். இந்த பருப்பை குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் நீரை வடித்து மிக்ஸியில் பொடியாக்கவும். உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

வெல்லத்தை 1 கரண்டி நீர் விட்டு கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி வெல்லத்தை மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்தவுடன் பொடித்த கடலைப்பருப்பு பொடியை அதில் போட்டு கிளறவும்.

வெல்லமும், கடலைப்பருப்பு பொடியும் சேர்த்து பிரெட் தூள் பதத்திற்கு வரும் போது கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து அதில் போட்டு நன்றாக கிளறவும். அதில் ஏலக்காயை பொடித்து சேர்த்து கிளறவும். சுவையான உக்காரை ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.