என்று தான் ஊடகங்கள் உண்மையைப் பேசியிருக்கின்றன?: மிரட்டும் மீராமிதுன்!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்
meera mithun - 2026

தன்மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எல்லாம் பொய் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் கடந்த சனிக்கிழமை சென்னை எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி ஒரு ரூபாய் கூட இதுவரை தனக்கு பேமென்ட் தரவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அவர் தனக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததால்தான் மும்பையில் குடியேறியதாகவும் தெரிவித்தார். மும்பைதான் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் சென்னை போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்தார். 10000 ரூபாய் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் சாடினார்.

இதனை கேட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் இதுபோன்று இங்கு பேசக்கூடாது என கூறியதாகவும், அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினரை தகாத வார்த்தையால் திட்டிய மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

இதனை தொடர்ந்து மீரா மிதுனின் ரசிகர்கள் இதுகுறித்து அவர்களிடம் கேட்டனர். அதற்கு எல்லாமே ஃபேக் நியூஸ் என்று கூறியுள்ள மீரா மிதுன், தன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஊடகம் என்பது பவர்ஃபுல் மீடியா அதில் இவ்வாறு தவறான செய்திகளை பரப்பலாமா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அது போல இதுவரை இவர்கள் என்னை பற்றி கூறியதெல்லாம் பொய் என்பது இதனால் தெரிகிறது. எப்பொழுதும் என்னைப் பற்றி செய்தி வெளியிடுவதே இவர்களுக்கு வேலையாக போய்விட்டது.

உங்கள் டிஆர்பி ரேட்டிங்காகவும் விளம்பரத்திற்காகவும் இது போல் செய்வது நல்லது இல்லை. அனைத்து மக்களும் பார்க்கக் கூடிய ஒரு செய்தி சேனலில் இது போல் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் நான் எச்சரிக்கிறேன்.

இன்று என் மீது வழக்கு பதிவு செய்தார்கள் என வெளியிட்ட எல்லா ஊடகங்களின் மீதும் நான் வழக்கு தொடர வேண்டிவரும். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.