
தேசியத் தலைவர் தேவர் என்ற ஹாஷ் டேக் இப்போது எக்ஸ் தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த வாரம் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி, , மருது சகோதரர்கள் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தேசிய தலைவர்களை சாதிய தலைவர்களாக சுருக்கி இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு மிகப்பெரும் தேசியத் தலைவர் என்பதை குறிப்பிட்டு, அவருடைய ஜெயந்தி நாளில், தேசிய தலைவர் தேவர் என்ற ஹாஷ்டேக் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் உடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பதும், அவரது தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்தார் என்பதும் வரலாறு.

முத்துராமலிங்கத் தேவர், உயிருடன் இருந்தவரை, தேசிய எண்ணம் கொண்ட ஆர்எஸ்எஸ்., அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.
ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், ‘தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ என்றார்.
தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், தேசிய எண்ணம் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்., அமைப்பை அதிகம் நேசித்தவர் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, ‘தேசியத் தலைவர் தேவர்’ என்ற தலைப்பிலான ஹேஷ்டேக் இன்று வைரலாகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவர் கலந்து கொண்ட செய்தி, அந்நாளைய தியாக பூமி, 8-3-1956, இதழில்ன் பக்.7-8ல் பிரசுமானது.


Trending Now Twitter: தேசியதலைவர்தேவர்
1) https://t.ly/SV9Tk
2) https://t.ly/LqZVc
3) https://t.ly/_4wGo … …