Dhinasari Home page

கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்குக் காரணம் சமூகவிரோதிகளே: கோவை ஆணையர்

News உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

கோவை:

கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்கும் காரணம் சமூக விரோதிகளே! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என, கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

கோவையில் ரேக்ளா பந்தயம் போது கலவரம் நடந்ததற்கு சமூக விரோத சக்திகளே காரணம். கலவரத்திற்கு காரணமாக சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இணைய தளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றை இளைஞர்கள் நம்ப வேண்டாம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போது புதிய நட்புகள் கிடைத்து இருக்கும். குறிப்பிட்ட போன் எண்களை கொடுத்து பேச சொல்லி வலியுறுத்துவார்கள். அந்த புதிய நட்புகள் விஷயத்தில் இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நட்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
– என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.