அவரது சுபாவமே அவருக்கு சாபமாக… கொலையாளிக்கு வாய்ப்பாக மாறிவிட்டது!

இந்தியா புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vijaya reddy tahsildar - 2026

அவருடைய சுபாவமே அவருக்கு சாபமாகவும் கொலையாளிக்கு வாய்ப்பாகவும் மாறியது. தலையை குனிந்து கொண்டு தன் வேலையைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர் தாசில்தார் விஜயா ரெட்டி. அதுவே அவருடைய கொலைக்கு காரணமானது. அவர் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் உயிர் பிழைததிருக்கலாம்.

ஒரு விவசாயியின் கையால் மிக மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அப்துல்லாபூர்மேட் தாசில்தார் விஜயாரெட்டி கவனமாக செயல்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்கிறார்கள் சக பணியாளர்கள்.

தன் அலுவலகத்துக்கு வரும் ஒவ்வொருவரோடும் அவர் அரை நிமிடம் அல்லது ஒரு நிமிட நேரம் பேசிவிட்டு தலையை குனிந்து கொண்டு தன் வேலையைச் செய்து கொண்டிருப்பார். இது அவர் குணம். அந்த இயல்பே அவருக்கு சாபமாக மாறியது.

தன் சேம்பரின் உள்ளே வரும் மனிதர்களை முழுமையாக கவனிக்காமல் தன் கடமையில் மூழ்கிப் போகும் இயல்பே அவர் உயிரை பலிவாங்கி விட்டது.

vijaya reddy tahsildar car - 2026
இன்னும் தாசில்தாருடைய கார் அலுவலக வாயிலிலேயே உள்ளது.

அலுவலகத்துக்கு வரும் மனிதர்களோடு பேசி அவர்கள் வெளியே சென்ற பின் வேறு வேலையில் ஈடுபடும் பழக்கம் இருந்திருந்தால் கொலையாளி சுரேஷின் பெட்ரோல் தாக்குதலுக்கான முயற்சியில் இருந்து சிறிது அளவாவது தப்பிக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

தாசில்தார் விஜயா ரெட்டி பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட பின்பே பயங்கர திட்டத்துடன் அவரைக் கொல்வதற்கு சுரேஷ் வந்திருப்பது நடந்த நிகழ்வில் இருந்து தெரிகிறது.

அதோடு பெட்ரோலை விஜயா ரெட்டி மீது ஊற்றிய சுரேஷ் சிகரெட் லைட்டரால் தீ வைத்ததால்தான் அவனுக்கும் தீ பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.