health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் போக்கு, இருதயநோய்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும். பித்த நீரை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கு கிறது. குடல் பூச்சிகளை ஒழிக்க வேப்பம்பூ ரசம் மிகவும் சிறந்தது.

பூண்டின் மகத்துவம்

பூண்டின் சாறு குடல் புண்ணையும் தோல் வியாதிகளையும் ஆற்ற வல்லது. ஆஸ்துமா, சளி, இருமல், உடல் எடை குறைவதைத் தடுக்கும். ஜீரண சக்தி அளிக்கும். இருதய வியாதிகளுக்கும் ஊளைச் சதையை குறைப் பதற்கும் தண்டு வடத்தைப் பாதிக்கும் கொடிய நோய்களை குணப்படுத் தவும் உதவும்.

கிராம்பு மருத்துவம்

கிராம்பை ஒரு சட்டியில் போட்டு வதக்கி வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் ஆறும்.

கிராம்பைத் தண்ணீர் விட்டரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம், சளித் தொல்லை நீங்கும்.

வயிற்றுப் போக்கை நிறுத்த…

சோறு வடித்த கஞ்சியில் சிறிது உப்பை சேர்த்துக் கலக்கிக் கொடுக்க பேதியாவது நிற்கும். காலரா மற்றும் வயிற்றுப் போக்குக் காலத்தில் இது நீர் அதிகமாக வெளியேறுவதைத் தடுக்கும்.

இருதய நோய்க்கு…

செந்தாமரைப் பூவின் இதழ்களை கஷாயமாகப் போட்டு பாலும் தேனும் கலந்து சாப்பிட்டு வர எவ்வளவு நாள்பட்ட இருதய நோய்களும் குணமாகும். இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.