Homeஉள்ளூர் செய்திகள்மதுரைடீ போட்டுக் கொடுத்து... சைக்கிள் ஓட்டி... அசத்திய காயத்ரி ரகுராம்!

டீ போட்டுக் கொடுத்து… சைக்கிள் ஓட்டி… அசத்திய காயத்ரி ரகுராம்!

61வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் நடிகை காயத்ரி ரகுராம் காபி போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

gayathri raghuram in madurai - Dhinasari Tamil

டீ போட்டுக்கொடுத்து, சைக்கிள் ஓட்டிய படி பாஜக பெண் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க பல்வேறு நூதன உத்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.மதுரை மாநகராட்சியின் நூறு வார்டுகளிலும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியில் 61வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு லட்சுமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம், மதுரை மாவட்டம் பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

61வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் நடிகை காயத்ரி ரகுராம் காபி போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, சைக்கிளை ஓட்டியபடி வார்டுக்குட்பட்ட பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,861FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...