ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மன் சிம்ம வாகன பவனி!

Published:

janagai mariamman temple utsav - 2026

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இரண்டாம்நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படிதாரர் பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு திருக்கோவிலில் இருந்து அம்மனை அழைத்துச் சென்று பூமேடு தெரு உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன்‌ வாண வேடிக்கை அதிர்வேட்டுகள் மேளதாளங்கள் முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

சோழவந்தான் கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img