கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் கரியமாளீஸ்வரர், காந்திமதி அம்மன், நாகேஸ்வரர், செளந்தரநாயகி சுவாமிக்கு அன்னாபிஷேகம் அலங்காரம்
கரூர் கல்யாண பசுபதிசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள பசுபதீஸ்வரர் , நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர், சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிகளுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் கற்பூர ஆர்த்தி ,கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் தீபாரதனை நடைபெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அண்ணா அபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.