கன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் இந்தியா சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள்
K R SIVAN - 2026

பக்தர்கள் வழிப்பாட்டுக்காக திறப்பு… இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பெற்ற உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் கேரளாவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

தமிழக கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள செங்கல் என்ற இடத்தில் சிவபார்வதி ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் 111.2 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகளை 800 பணியாளர்கள் ஆலயத்திலேயே தங்கி நிறைவு செய்தனர்.

இதை பக்தர்கள் வழிபாட்டுக்கு மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சிவலிங்கத்தின் உள் பகுதியில் 8 தளங்கள் உள்ளன.

கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவலிங்கத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.