
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட கடலூரிலிருந்து இந்து தமிழர் கட்சி சார்பில் பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நடைபெற்றது.
இன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ஸ்ரீ ராமர் சிலை அமைத்து கோயில் கட்டும் பணிக்கு இந்து தமிழர் கட்சி தலைமை சார்பில், கடலூரில் இருந்து பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ஸ்ரீராமபிரான் சிலை அமைத்திட கோயில் கட்டும் பணிக்கு கடலூர் இந்து தமிழர் கட்சியின் சார்பில் 25,000 செங்கற்கள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடலூரில் பூஜை செய்த மூன்று செங்கற்கள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் உதயவேல் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கடலூர் என்.ஆர். பரணிதரன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் திருமுத்துக்குமார், ஆலய பாதுகாப்பு குழு செயலாளர் தண்டபாணி, விஸ்வகர்ம மகாசபா அவைத்தலைவர் என்.இ.என் இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.



