பெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்!

சற்றுமுன்
kcr viral video - 2026

திசா கொலைக் குற்றவாளிகளின் என்கவுண்டருக்கு பிறகு தெலங்காணா முதல்வர் கேசிஆர் போலீசாரை பாராட்டினார். முன்பு கேசிஆர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கேசிஆரின் கருத்தை மீண்டும் நினைவு படுத்தினார் அமைச்சர் புவ்வாட அஜய். திசா கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கௌன்டர் பற்றி பொதுமக்களோடு சேர்ந்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

அதே நேரம் தெலங்காணா முதல்வர் கேசிஆர் தெலங்காணா போலீசாரை பாராட்டு மழையில் நனைத்தார். முன்பு முதல்வர் கேசிஆர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய போது சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.

பெண்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டுமானால் பயப்பட வேண்டும் என்று அவர் செய்த விமர்சனத்தை இப்போது நினைவு படுத்திக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

அதோடு பெண்கள் மேல் கை வைத்தால் பயத்தில் ஒண்ணுக்கு போக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கேசிஆர் அப்போது கூறிய வார்த்தைகளை தற்போது செய்து காட்டிவிட்டார் என்று புகழ்கின்றனர்.

அந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

https://twitter.com/KSudharshanRao3/status/1202804923877838849

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.