கோல்கத்தா டாக்டர்கள் ஸ்ட்ரைக்குக்கு காரணம் அமித் ஷா: மிரட்டும் மம்தா; நிமிர்ந்து நிற்கும் ஜூனியர் டாக்டர்கள்!

west bengal doctors - 2026

மேற்கு வங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் டாக்டர்கள் ஸ்டிரைக் 4 மணி நேரத்தில் கைவிடப்பட வேண்டும். பணிக்குத் திரும்பாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டியுள்ளார். அதே நேரம், இந்த டாக்டர்கள் ஸ்ட்ரைக்குக்குக் காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

கடந்த திங்கள் கிழமை கோல்கட்டாவில் உள்ள என்.ஆர்.எஸ்., மருத்துவக் கல்லுாரியில் நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரைத் தாக்கியதில், தலையில் காயம்பட்டு அந்த டாக்டர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் திங்கள் கிழமை இரவு முதல் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த வேலை நிறுத்தம் 4 வது நாளை எட்டியுள்ளது. இதனால் கோபம் அடைந்த மம்தா, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அங்கே அவரை ஜூனியர் டாக்டர்கள் சூழந்து கொண்டனர். பின் ‘எங்களுக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

mamta banarjee - 2026இதனால் மேலும் கோபமடைந்தார் மம்தா! கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இது குறித்து மருத்துவமனைக்கு வெளியே அவர் கூறிய போது, இது சிபிஎம் மற்றும் பாஜக.,வினரின் சதி என்றார்.

இதனிடையே கோல்கட்டா டாக்டர்கள் போராட்டத்தை ஆதரித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெல்மெட்களை அணிந்தபடி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவம் பார்த்தனர்.

‘நாங்கள் டாக்டர்கள்; தீவிரவாதிகள் இல்லை’ என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் மம்தா விடுத்த மிரட்டலால் மேற்கு வங்க டாக்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீல் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரி – என்ஆர்எஸ்எம்சி.,யின் ஜூனியர் டாக்டர்களை தூண்டி விடுவது பாஜக., என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பில் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்து முஸ்லிம் மத மோதல்களை அமித் ஷா தூண்டிவிட்டுள்ளார், நோயாளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பிரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், கும்பலாகத் தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மம்தா பானர்ஜியின் வாக்காளர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது பாஜக.,! அதனால்தான் மம்தா, அவ்வாறு தாக்கியவர்கள் குறித்து இவ்வாறு பரிந்து பேசுகிறார்; தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த டாக்டர் குறித்து பேச மறுக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாஜக.,வினர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories