மேகம் டாஸ் போட்டது; மழை பேட் செய்தது! இந்திய நியூஸி வீரர்கள் வேடிக்கை பார்த்தனர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

no match due to rain - 2026

இந்தியா–நியூசிலாந்து அணிகள் விளையாட வேண்டிய போட்டி, மழையால் ரத்தானது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் கன மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது. இன்று நாட்டிங்காமில் நடைபெற இருந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன.
ஆனால், நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. ‘சூப்பர்சானிக்’ உதவியால் மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்தன.

பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது.

மேகம் டாஸ் போட்டு வெற்றி பெற, மழை முதலில் பேட் செய்யக் களம் இறங்கியதால், வேறு வழியில்லாத நிலையில் இரு அணியினரும் வேடிக்கை பார்த்தனர்… என்று இந்தச் சூழ்நிலையை டிவிட்டர் வாசிகள் கமெண்ட்களைப் போட்டி பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.