நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பசுமை விருது பெற்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் சிறப்பு பசுமை விருதுகளை வழங்கினார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் தடையாணையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த மண்டல ஒருங்கிணைப்பாளர்களான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் முதன்மைச் செயலாளர் அமுதா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கு பசுமை விருதுகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெகிழி இல்லா நெல்லை திட்டத்தின் வாயிலாக பிளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் அதற்கு ஈடான மாற்றுப் பொருள்கள் உபயோகப் படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்-க்கு பசுமை விருதினை அளித்தார்!





