மனிதனின் அவதி போக்கி அதிகாரமளிக்க பாரதி கொண்ட பார்வை: தமிழில் டிவிட்டிய மோடி!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
bharathiar - 2026

மனிதனின் அவதி போக்கி, அதிகாரம் அளிக்க பாரதி கொண்டிருந்த பார்வையை எடுத்துக் காட்டி, தமிழில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.

டிச.11 – இன்று தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள். இந்த நாளில் தனது கருத்துகளை தமிழில் பதிவு செய்து, தேசியக் கவிக்கு புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன்.
தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார்.

மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது – என்று பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.