தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த கலவரக் கும்பல், அங்கிருந்த வாகனங்களை அடித்து கல்லெறிந்து உடைத்து, தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தியது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடிக்கு வந்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேதமடைந்த அரசு அலுவலகங்கள், வாகனங்கள், உட்பட பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் கடம்பூர் செ.ராஜு, ராஜலெட்சுமி ஆகியோரும் வந்து இன்று பார்வையிட்டார்கள். அவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரியும் உடன் இருந்து விளக்கினார்.




