மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை எதிரொலி: குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றால சீஸன் அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர நிவர்த்தி நாளில், சீசனின் அறிகுறியாக, நேற்று இரவு முதல் மழை பெய்தது. இன்று மதியம் குற்றால மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதில் கன மழை பெய்ததால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது.
பின்னர் இன்று மதியம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.




