பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக… இழப்பீடு ரூ.6 லட்சம் வழங்கிய உ.பி., முஸ்லிம்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
up muslims fined 6lakh - 2026

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள்.

CAA எதிர்ப்பு ஆர்பாட்ட வன்முறையால் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வன்முறையாளர்கள் யார்? யார்? என்பதும், எந்தப் பகுதியில் யாரால் வன்முறை நடத்தப்பட்டது? யாரால் தூண்டப்பட்டது ? என்பதையெல்லாம் கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வசூல் செய்யும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுபப்பட்டு வருகிறது.

இதனிடையே வன்முறை களமான மீரட்டின் புலந்தர்ஷா பகுதியைச் சேர்ந்த மக்கள் (வன்முறையில் ஈடுபட்டோர்)தாங்களாகவே முன்வந்து 6 லட்சம் இழப்பீடை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்த கூட்டம் சென்ற வாரத்தில் நடைப்பெற்றதை அடுத்து நேற்று ஊர்மக்கள் உள்ளூர் இஸ்லாமிய அரசியல் தலைவர் ஷைக்கிலுல்லா தலைமையில் வந்திருந்து பொதுச்சொத்து சேதப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை கொடுத்தனர்.

மேலும் அன்றைய வன்முறையின் போது காவல்துறை வேன் ஒன்று போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டது. அதே போன்றதொரு வேன் புதியதாக வாங்கித் தர ஒத்துக் கொண்ட அப்பகுதி மக்கள், அந்த மாடல் கிடைக்காத காரணத்தால் அதற்குரிய பணத்தையும் செலுத்தியதாக தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் இனி இது போன்று வன்முறைகளில் எக்காலத்திலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தாங்களாகவே முன்வந்து சேதத்திற்கான இழப்பீடு தொகையை கொடுத்துச் சென்ற அம்மக்களால் துறைரீதியான காலதாமதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறிய மாவட்ட நிர்வாகம், மற்றப் பகுதிகளிலும் இதே நடைமுறையில் மக்கள் நடந்து கொண்டால் அவர்களுக்கும் சிக்கல் இல்லை, நிர்வாக தாமதமும் நடக்காது என்று தெரிவிக்கின்றனர்.

[poll id =”29″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.