மலை மேலிருந்து 2 வயது குழந்தையை வீசிக் கொன்ற தாய்!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
marriage 1 - 2026

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள மொட்டைமலை மீது முருகன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சிலர், அங்குள்ள பள்ளத்தில் 2 வயது குழந்தையின் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு, காவல்த்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர் காவல்துறையினர், ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த தங்கமணி என்பவர் குழந்தை காணாமல் போய் விட்டதாகவும், தாய் மஞ்சுளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தது தெரியவந்தது.

baby - 2026

இதையடுத்து மஞ்சுளாவிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில், மஞ்சுளா சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துள்ளார்.

முதலாவதாக தனது தாய்மாமனை மணந்த மஞ்சுளா பின் இரண்டாவதாக மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

rajamani - 2026

பின்னர் பாண்டியனை பிரிந்த மஞ்சுளா, தாழனூரில் வசித்து வந்த நிலையில் ராஜாமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு குழந்தை தடையாக இருந்ததால் அதை கடந்த 22 ஆம் தேதி ராஜாமணியுடன் சேர்ந்து கம்மவான்பேட்டை மலையில் குழந்தையை வீசி பாறாங்கல் வைத்து மூடியுள்ளனர்.

பின்னர் அடுத்த நாள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜாமணி மஞ்சுளா இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.