திருவானைக்கா ஆலயத்தில் கிடைத்த தங்கப் புதையல்..!

Published:

gold coins recovered from thiruvanakkaval5 - 2026

திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி முன் உள்ள வாழைத் தோட்டத்தை, நந்தவனமாக மாற்றுவதற்கான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகளுக்கு, குழி தோண்டிய போது, 1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது. பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

கோவில் நிர்வாக அதிகாரிகள், பித்தளை கூஜாவை திறந்து பார்த்த போது, அதனுள் நுாற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. வருவாய்த் துறை அதிகாரிகள், தங்க நாணயங்களை சரி பார்த்தபோது, அதில், 1,716 கிராம் எடையில், 505 நாணயங்கள் இருந்தன.

கோவில் அலுவலகத்தில் வைத்து கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img