பாவப்பட்ட உயிர்களா … நாம்..?!

இலக்கியம் உரத்த சிந்தனை கவிதைகள் லைஃப் ஸ்டைல்
abhinandan ratanlal - 2026

பலிதானம் தரவென்றே பிறந்த
பாவப்பட்ட உயிர்களா நாம்

நம் ஆன்மிக மென் சதைகள் எல்லாம்
கூர் மத நகங்கள் குத்திக் கிழிக்கத்தானா

நம் உயர் தத்துவங்களின் இதமான தோல்கள் எல்லாம்
அரசியல் கோரைப் பற்கள் பிய்த்து எறியத்தானா

என்று நமக்குப் புரியும்
நம் சகிப்புத்தன்மையின் கால்கள்
சுற்றி வளைக்கும் தந்திரங்களிடமிருந்து
தப்பிக்கப் போதுமானவையல்ல என்பது

என்று நமக்குத் தெரியவரும்
நம் பன்மைத்துவத்தின் மிருதுவான எலும்புகள்
ஒற்றைப்படைகளின் முறுக்கல்களால்
எளிதில் நொறுங்கக்கூடியவை என்பது

delhi police murder - 2026

ஜாதிப் பற்றின் பசும் புல்லையும்
ஆன்மிக சுதந்தரத்தின் தளிரிலைகளையும்
பெருந்தன்மையின் உதிர் கனிகளையும் உண்டு
யாம் உருவாக்கிய இன்னுடல்
இதுவாகவா இருக்கவேண்டும்

நம் நிலத்து நீரோடைகளைக் கடந்து செல்லும்
பகலின் குளிர் காற்றுகள்
அதன் புதர் மறைவுக்கு அழைத்து வந்துவிடுகிறது
அனைத்து வேட்டைக் கண்களையும்

மரணச் சரிவின் வழி இறங்கி ஏறியே தணிக்கமுடிகிறது
நம் ஒவ்வொரு நாளின் எளிய தாகத்தைக்கூட

மையம் அழிந்த திறந்தெவெளியில்
ஒற்றுமையின்மையின் இருளில்
படுத்துறங்கும் வரையில்
முடிவற்று நீளும் நம் இரவுகள் பாதுகாப்பற்றவையே

நமக்குள் முட்டி மோதிக்கொள்ள மட்டுமே
நாம் இப்போது பயன்படுத்தும்
தற்காப்புக் கொம்புகளின்
நிஜப் பயனைப் புரிந்துகொண்டாகவேண்டும்

கூர் தீட்டிக்கொள்ளச் சொல்லும் கற் பாறைகளை
குளம்புகளால் உடைத்துப் போடும் மடத்தனம் புரிந்தாகவேண்டும்

இனியும் தொடரக்கூடாது
நம் பலிதானம்
கானகத் தாயின்
ஆதிக் குழந்தைகள் நாம்

ரத்தம் சிந்துதல் தவிர்க்க முடியாதது என்றால்
அவள் காலடியில் சிந்த வேண்டியது
இனி நம் ரத்தமல்ல.

  • பி.ஆர்.மகாதேவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.