திமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு!

Published:

nithish kumar prasanth kishore - 2026

மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்தப் போவதாகக் கூறி ரூ. 360 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதாகக் கூறப் படும், திமுக.,வின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தமது பொலிடிகல் ஸ்ட்ராடஜி நிறுவனம் மூலம், பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை வகுத்துக் கொடுத்து, கணிசமாக பணம் பெற்றார். இந்த நிலையில், இவர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர் மோதிகாரி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் பாத் பீகார் கி என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடி பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார். இதை அடுத்து பிரசாந்த் கிஷோர் மீது, ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img