வயல்பகுதியில் அறுவடை செய்துக் பெண்களுடன் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்தும்,உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள வயல்வெளிக்கு சென்று, அங்குள்ள உழவர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்த மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமா மாலினி, டிராக்டரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு இயக்க முயற்சி செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமா மாலினி வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




