
ஆந்திராவை சேர்ந்த லோடுமேன் கள்ளக்காதலி வீட்டில் இருக்கும்போது அவரது கணவன் வந்ததால் பயத்தில் நிர்வாணமாக மாடியில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த 30 வயதான நாராயணன் என்பவன் எருக்கஞ்சேரியில் வசித்து வந்தவர்
இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது அதன் அருகில் உள்ள மாலா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் பல நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த தகவல் அரசல் புரசலாக மாலாவின் கணவர் திலகருக்கு தெரியவரவே வீட்டில் மனைவிக்கு தெரியாமல் Cctv பொறுத்தியுள்ளார்,
அதனை தொடர்ந்து கண்காணித்ததில் மனைவி தவறான பாதையில் செல்வது தெரியவந்துள்ளது.
அதுபோல் கடந்த வாரமும் திலகர் வெளியே சென்றவுடன் மாலா வீட்டிற்கு நாராயணன் வர அறிந்து கொண்ட கணவன் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வீட்டை முற்றுகையிட்டுள்ளனா்.
இதனை அறிந்து கொண்ட கள்ளக்காதலன் எங்கே நம்மை கையும், களவுமாக பிடித்து தர்மஅடி கொடுப்பார்கள என்று நினைத்து பதற்றம் அடைந்த நாராயணன் மொட்டை மாடிக்கு பின்வாசல் வழியாக ஓடி அங்கிருந்து தப்பி செல்ல நினைத்திருக்கிறார்,
ஒரு கட்டத்தில் மாடியில் இருந்து குதித்த அவர் படுகாயங்கள் ஏற்பட்டு அங்கேயே ததுடிதுடிக்க இறந்துவிட்டார்,
இதுகுறித்து தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் நகர் போலீஸார் விரைந்து வந்து நாராயணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



