
தென்காசி மாவட்டம் கடையநல்லுா் நுாலகத்தில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் திராளனோர் கலந்து கொண்டனா்.
கடையநல்லூர் கிளை நூலகத்தில் வைத்து நூலக விதை நெல் வாசகர் வட்டம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் அகஸ்தியன் தலைமைதாங்கினார். குமந்தாபுரம் காளியம்மன் நர்சரி பள்ளி தாளாளர் செல்லச்சாமி, முன்னிலைவகித்தார்.

ஆசிரியர் மூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விதைநெல் வாசகர் வட்டத் தலைவர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் புதிய புரவலர்கள் சங்கர், மாரிச்சாமி, கிரிமாரி ஆகியோருக்கு வாசகர் வட்ட கௌரவத் தலைவர் இராஜகோபாலன் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
விதைநெல் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஆவுடையப்பன், இளங்குமரன், சந்திரக்குமாரி, முத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் நாகராஜ் நன்றி கூறினார்.



